தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமல்லபுரத்தில் வேகமெடுக்கும் மறு சீரமைப்பு பணிகள்

காஞ்சிபுரம்: இந்திய பிரதமர், சீன அதிபர் வருகைக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில் மாமல்லபுரத்தை மறு சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளது.

Mamallapuram rearrangement was accelerated

By

Published : Oct 5, 2019, 1:58 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தை பரார்வையிட்டு கலைப் பொருட்கள் விநியோகத்திற்கான ஒப்பந்த உடன்படிக்கை கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளனர்.

இவர்களின் வருகைக்காக மாமல்லபுரம் சுற்றுலா பகுதிகளை மறுசீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டுள்ளது. பிரதமர் வருகைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் மறுசீரமைப்பு பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

மாமல்லபுரத்தில் வேகமெடுக்கும் மறு சீரமைப்பு பணிகள்

குறிப்பாக நடைபாதை அமைத்தல், கல் பதித்தல், சுற்றுச்சுவர் அமைத்தல், புல் புதைத்தல் போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இதன்காரணமாக கடலோரப் பகுதிகளிலுள்ள கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதையும் படிங்க:பிரதமர், சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு குறித்து சோதனை தீவிரம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details