காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (53), விவசாயி. இவர் கடந்த 16ஆம் தேதி தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காககாஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் சந்திரனுக்கு பணம் எடுக்க தெரியாததால், அருகில் நின்றிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் அட்டையை கொடுத்துள்ளார்.
அறிமுகம் இல்லாத அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி பணம் வரவில்லை என்று கூறி, ஒரு போலியான ஏடிஎம் அட்டையை சந்திரனிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சந்திரனுக்கு, அவரது உண்மையான ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 40 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக சந்திரன் பெரிய காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.