தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா! - Athivarathar Festival

காஞ்சிபுரம்: அத்திவரதர் திருவிழாவை ஒட்டி கோயில் குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு நீர் வெளியேற்ற ஆயத்தப்பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டுவருகிறது.

ATHIVARATHAR

By

Published : Jun 9, 2019, 9:34 AM IST

கோயில் நகரம் காஞ்சி மாநகரத்தில் பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலம், மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவில் குளத்தின் அடியில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி மரத்தால் ஆன அத்திவரதரை வரும் ஜூலை 1ஆம் தேதி அங்கிருந்து எடுத்து பக்தர்கள் பார்வைக்கு 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்படும். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்வையிடுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதர் திருவிழா

அதற்கான பணிகளில் தற்பொழுது இந்து அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் கோயில் குளத்தில் உள்ள நீரை அகற்றுவதற்கான பணிகளை ராட்சத மோட்டார் மூலம் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து அதே கோயில் உள்ள மற்றொரு குளத்திற்கு நீர் விடப்படுகிறது. இந்தப்பணி 15 நாட்கள் நடைபெறும்.

களத்திலிருந்து அத்திவரதர் அங்கிருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அத்திவரதர் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பக்தர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தற்காலிக பேருந்து நிலையம், போக்குவரத்து வசதி, தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துவருகிறது. அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணுவதற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details