தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதருக்கு குவியும் அன்னதான நிதி! - அன்னதானம் வழங்கும் திட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்துக்கு நிதி குவிந்துவருகின்றன.

அத்தி வரதர்

By

Published : Aug 2, 2019, 3:05 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார். மேலும், அன்னதான திட்டத்திற்கு பொதுமக்களும் இணையதளம் மூலம் 10 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, 46 தன்னார்வ அமைப்பினர் அன்னதானம் வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்னதான திட்ட தொடக்க நிகழ்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அன்னதானம் வழங்கும் திட்டம்

மேலும், சனிக்கிழமை ஆடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்றுவரும் அத்திவரதர் உற்சவம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் நடைபெறுமென்றும், ஆண்டாள் திருக்கல்யாணம் முடிவடைந்தவுடன் இரவு 8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details