காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிகின்றனர்.
கடந்த 1ஆம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் 20 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகைபுரிந்து அவரை தரிசித்துச் செல்கின்றனர்.
அத்திவரதர் 48 நாட்கள் மட்டுமே காட்சியளிப்பார் என்பதால் பலரும் கூட்ட நெரிசல்களை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வரிசையில் நின்று தரிசித்துச் செல்கின்றனர்.
சமீபத்தில் வரிசையில் நின்றவர்களில் நான்கு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். பக்தர்களுக்கு போதிய வசதி செய்து தரவில்லை என்று கோயிலுக்கு வருபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்ய வசந்த மண்டபத்தில் இருக்கும் அத்திவரதரை வெளியே கொண்டுவந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்தர்களுக்காக அத்திவரதர்வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.