உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையொட்டி முன்னேற்பாடுகள் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அத்தி வரதர் திருவிழாவிற்காக பல்வேறு துறை சார்பில் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
அத்தி வரதர் தரிசனம் காணும் நாள் வந்துவிட்டது! - அத்தி வரதர்
காஞ்சிபுரம்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழாவையொட்டி தமிழக அரசு சார்பில் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், பஸ் வசதி, பார்க்கிங், சுகாதாரம் உள்ளிட்டவை, 24 மணி நேரமும், தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் காவல்துரையினர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவர்கள் ஈடுபட இருக்கின்றனர். மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் பணியாற்றும், 2,119 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக, ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
மேலும், குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்தி வரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல் நாளே அத்தி வரதரைப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாட்கள் கழித்து அத்தி வரதரைத் தரிசிக்கத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.