காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தின் 45ஆம் நாளான இன்று, இளஞ்சிவப்பு வண்ண பட்டாடை, ராஜ மகுடம் அணிந்தவாரு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.
இந்த வைபவத்தின் 44ஆம் நாளான நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில், பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அத்திவரதர் வைபவம் தொடங்கி 45 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 92 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நாளை இரண்டு மணியுடன் விஐபி தரிசனம் முற்றிலுமாக நிறைவடைகிறது.