காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை எடுத்து, ஒரு மண்டல பூஜை செய்து மீண்டும் நீருக்குள் வைப்பது வழக்கம். அதன்படி, கடந்த 1ஆம் தேதி முதல் இந்த வைபவம் தொடங்கி நடந்து வருகிறது. அத்திவரதர் 44 ஆம் நாளான இன்று அத்தி வரதர் ளம் பச்சை, இளம் ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்தும், தோள், கைகளில் 8 கிளிகளுடன், கிரீடம் சூட்டியும், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ள அத்தி வரதர் வைபவம் - athivarathar
காஞ்சிபுரம்: வரதராஜபெருமாள் கோயிலில் நடைபெற்றுவரும் அத்தி வரதர் வைபவத்தின் 44 ஆம் நாளான இன்று இளம் பச்சை, இளம் ஆரஞ்சு நிறத்தில் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அத்தி வரதர்
இந்நிலையில், வரும் 16ஆம் தேதியுடன் இந்த தரிசனம் நிறைவடைவகிறது. இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் காஞ்சிபுரம் நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருக்கிறார்கள். இதனால் தரிசன வரிசைகள் காலையிலேயே நிரம்பியுள்ளன. 3 கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்று சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 43 நாட்களில் இதுவரை 89 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.