காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் முடிய சில நாட்களே உள்ளதால், அதிகளவான பக்தர்கள் தரிசனத்துக்காக காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வெண்பட்டு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்
காஞ்சிபுரம் : அத்திவரதர் வைபவத்தின் 41ஆவது நாளான இன்று ரோஸ், ஊதா, வெண்பட்டு நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்கள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
காஞ்சிபுரம்
கடந்த சில நாட்களில் மட்டும் சராசரியாக 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று அத்திவரதர் ரோஸ், ஊதா, வெண்பட்டு நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்கள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் வைபவம் முடிய சில நாட்களே உள்ள நிலையில், வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.