தமிழ்நாடு

tamil nadu

நீல நிறப் பட்டாடையில் காட்சித் தரும் அத்திவரதர்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் உற்சவத்தின் 37ஆவது நாளான இன்று வெள்ளை, நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.

By

Published : Aug 6, 2019, 3:11 PM IST

Published : Aug 6, 2019, 3:11 PM IST

Athivarathar

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலின் 37ஆவது நாளாக இன்று காட்சி அளிக்கும் அத்திவரதர் வெள்ளை, நீல நிறப் பட்டாடை உடுத்தி, ரோஜா பூ, மல்லிகை பூ மாலை அணிவித்து நெய்வேத்தியம் செய்யப்பட்டு காலை 5 மணியிலிருந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

நீல நிறப் பட்டாடையில் அத்திவரதர்
ஆயிரக்கணக்கான பக்தர்கள்அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் சுமார் 3 கி.மீட்டர் தூரம் வரை வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தரிசனம் நேரமும் நீட்டிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. 36ஆவது நாளான நேற்று வரை சுமார் 57 லட்சத்து 50ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details