அத்திவரதை தரிசனம் செய்ய தினமும் மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போவதையொட்டி பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”நேற்று அத்திவரதரை 3.20 லட்சம் மக்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதர் தரிசனம் நிறைவையொட்டி சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு! - athivaradhar
காஞ்சிபுரம்: ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதையொட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
அத்திவரதர்
ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதையொட்டி, ஆகஸ்ட் 16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 16, 17 தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10ஆம் தேதி முதல் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு கூடுதலாக பேருந்து வசதிகள் செய்யப்படும். முக்கியமாக 46 இடங்களில் முழுமையாக அன்னதானம் வழங்கப்படும். அதேபோல் அதிகபட்சமாக 21 மணி நேரம் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள்” என்றார்.