காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதரைக் காணும் தரிசன நாட்களை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய இந்து மகா சபா சார்பில் வசந்தகுமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரிய மனு - நாளை விசாரணை - ஸ்ரீ அத்திவரதர்
காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவ தரிசன நாட்களை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அத்தி வரதர்
அந்த மனுவில், அத்திவரதர் சிலையை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்ற ஆகம விதி ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இவரது மனு மீதான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.