40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக வெளியே வைக்கப்பட்டது. 31 நாட்கள் சயன கோலத்திலிருந்த அத்திவரதர், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் வைக்கப்பட்டார்.
பக்தர்களுக்கு பை... பை... சொன்ன அத்திவரதர்! - அத்தி வரதர்
காஞ்சிபுரம்: 48 நாட்கள் முடிவடைந்த நிலையில் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது.

அத்தி வரதர்
அனந்தசரஸ் குளம்
நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அலைகடலென காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் திரண்டனர். ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். 48 நாட்கள் முடிவடைந்த நிலையில், நேற்றிரவு 12 மணிக்குப் பிறகு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு காட்சியளித்துவந்த அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்டதால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர். இனி 2059ஆம் ஆண்டுதான் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து எடுக்கப்படும்.
Last Updated : Aug 18, 2019, 9:31 AM IST