தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதர் தரிசனம்... பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு! - #Athi Varadar

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

athi varadar

By

Published : Jul 19, 2019, 5:20 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் கும்பகோணத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதர் தரிசனம் இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த தரிசனம் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 40 வருடங்களுக்கு பிறகு எழுந்தருளியிருக்கும் அத்திவரதரின் தரிசனம் 19ஆம் நாளான இன்றும் நடைபெற்றது. இதனால் அத்திவரதரை தரிசிக்க சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(72) என்பவர் வரிசையில் காத்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த அவர் உயிரழந்தார்.

திருவோணம் வைபவமான நேற்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்தனர். அப்போது சாமி தரிசனம் செய்து வெளியே வந்த 4 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த சூழலில் அத்திவரதர் தரிசனத்தில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details