காஞ்சிபுரம் மாவாட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் கண்ணன்(22) என்பவர், இளங்கலை இலக்கியத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சிறுவயது முதலே ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் ஏழு ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 170 மாரத்தான், மினி மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அதில் 153 போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்திய ரன்னர் போட்டியில் பங்கேற்று கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும், அதிகாலை 3 மணிக்கு துவங்கி 8 மணி வரையும், மாலையில் 3.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 கி.மீ தூரம் என ஓடி, ஒரே மாதத்தில் 2369 கி.மீ தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்த பெண்மணி ஒரு மாதத்தில் ஓடிய தூரம் 192 கி.மீ. அதனோடு தினேஷ் கண்ணன் ஓடிய தூரத்தைக் கணக்கிட்டால் 10 மடங்கு அதிக தூரத்தை கடந்துள்ளது தெரியவரும்.