தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உதவி மருத்துவ அலுவலர் பணியிட மாற்றம் - Sexual harassment news in Kanchipuram

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த உதவி மருத்துவ அலுவலர் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

முத்துகிருஷ்ணன்
முத்துகிருஷ்ணன்

By

Published : Jun 12, 2021, 3:04 AM IST

காஞ்சிபுரம்: இரயில்வே சாலையில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தட்டச்சு பணியாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

அப்பெண்ணுக்கு ஹோமியோபதி மருத்துவ பிரிவில் உதவி மருத்துவ அலுவலராக பணிபுரியும் முத்துகிருஷ்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமியிடம் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் முத்துகிருஷ்ணன் மதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முத்துகிருஷ்ணன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் அப்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனால் அப்பெண் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஐயப்பன், இந்திய மருத்துவர் சங்கம் ஹோமியோபதி துறை, அரசு ஊழியர் சங்கம் ஆகியோர்களிடம் புகார் மனு அளித்திருந்தார்.

மேலும் விசாரணை நடத்துகின்ற மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாச்சாமி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. எனவே முறையான விசாரணை நடைபெற வேண்டுமென்றால் உயர் அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சித்த மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:காதலித்த பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details