காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே தனியார் திருமண மண்டபத்தில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் சஞ்சீவி ரெட்டியின் 91ஆவது பிறந்தநாள் விழா அனைத்து அகில இந்திய தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்ப மனு வழங்கும் தேதி இன்று அறிவிப்பு? - வேட்பாளர்கள் விருப்பமனு வழங்கும் தேதி விரைவில்
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விருப்ப மனு அளிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
congress
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விருப்ப மனு அளிப்பது தொடர்பாக அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும். பெறப்பட்ட விருப்பம் மனுக்களின் அடிப்படையில் தொகுதிக்கு தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்" என்று தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அலுவலர்களுக்கு பயிற்சி
TAGGED:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை