தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவால் கிடப்பில் போடப்பட்டுள்ள அண்ணா பெயர் கொண்ட திட்டம் ' - Anna Silk park in kanchipuram

காஞ்சிபுரம்: அதிமுகவால் கிடப்பில் போடப்பட்ட கீழ்கதிர்பூர் பேரறிஞர் அண்ணா பட்டு பூங்கா திட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் சபாபதி மோகன்  தெரிவித்தார்.

சபாபதி மோகன்
சபாபதி மோகன்

By

Published : Dec 1, 2020, 12:05 AM IST

வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக, திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் சபாபதி மோகன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான எழிலரசன் உடனிருந்தனர்.

சபாபதி மோகன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாபதி மோகன், "2009ஆம் ஆண்டு திமுகவினால் அடிக்கல் நாட்டப்பட்ட கீழ்கதிர்பூர் பேரறிஞர் அண்ணா பட்டு பூங்கா திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கப்பட்டும் அதிமுக அதனை கிடப்பில் போட்டுள்ளது. கட்சியின் பெயரில் அண்ணா என வைத்துக் கொண்டு இப்படி செய்வது வருத்தம் அளிக்கிறது.

இந்தப் பட்டு சுத்திகரிப்பு நிலையம், பன்னாட்டு தொழில் கல்வி உள்ளிட்டவையால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. அடுத்தாண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது, இந்த பட்டு பூங்கா திட்டப் பணிகள் தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சமஸ்கிருத திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டை பிளக்கும் கோடாரி

ABOUT THE AUTHOR

...view details