பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் பெரியார் தூண் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதிப் பேரணியாக காமராஜர் சாலை, பேருந்து நிலையம், வழியாக பெருநகராட்சி அலுவலக வளாகம் வரை சென்றனர்.
அண்ணா நினைவு நாள்:உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி - DMK peace rally Udhayanidhi Stalin
காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
பின்னர் அங்குள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் தலைமையில் திமுகவினர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த பேரணியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எம்.எல்.ஏக்கள் எழிலரசன், அரசு, புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.