தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பிறந்தநாளன்று செயல்பாட்டுக்கு வரும் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா! - அமைச்சர் ஆர். காந்தி

காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா, அண்ணா பிறந்தநாளன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் எனக் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

Kanchipuram Handloom Silk Park
Kanchipuram Handloom Silk Park

By

Published : Jun 12, 2021, 2:57 AM IST

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் 102 கோடிய 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவின் பணிகளை நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா செயலாக்கும் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர். காந்தி கூறியதாவது, "காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி பட்டு பூங்காவில் 25 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அவ்வாறு நிறைவு பெற்றுள்ள பணிகளோடு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கைத்தறி பட்டுப் பூங்கா செயல்படவுள்ளது.

மேலும், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, பட்டு பூங்காவை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வறுகிறது. இதன் மூலம் 18 ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெற வாய்ப்புள்ளது. நகர்ப்புறத்திலுள்ள நெசவாளர்கள் பட்டுப் பூங்காவில் அனைத்து வசதிகளுடன் வேலை செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details