தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைவண்ணத்தைக் காட்டிய காஞ்சிபுர இளைஞருக்கு ஆனந்த் மகேந்திரா பாராட்டு! - drawing

தனது உருவத்தை தமிழ் எழுத்துகள் மூலம் வரைந்த காஞ்சிபுர இளைஞரை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பாராட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் இளைஞர்
காஞ்சிபுரம் இளைஞர்

By

Published : May 23, 2022, 4:17 PM IST

Updated : May 23, 2022, 8:45 PM IST

காஞ்சிபுரம்: சுந்தர் - முருகம்மாள் தம்பதியின் 25 மகனான கணேஷ். டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட கணேஷ் தொடக்கத்தில் நண்பர்கள், உறவினர்களுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்து வந்துள்ளார்.

கணேஷ் தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்படப் பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, இசைஞானி இளையராஜா எனப் பலரது ஓவியங்களையும் தத்ரூபமாக தனக்கே உரிய பாணியில் வரைந்துள்ளார்.

கணேஷ் வரைந்த ஓவியங்கள்
இந்நிலையில் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் ஓவியத்தை 741 பழமையான தமிழ் எழுத்துகளால் தத்ரூபமாக வரைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
கணேஷ் வரைந்த ஓவியங்கள்
இப்புகைப்படம் வைரலாக, இதனைப் பார்த்த ஆனந்த் மகேந்திரா, 'ஆஹா, என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துகளால் வடிவானது, நான் வியக்கிறேன்.
தமிழ் மொழி பிரமாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவப் படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து புகைப்படத்தை வரைந்த கணேஷ் கூறுகையில், 'மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துகள் 247 மற்றும் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ளிட்ட 741 எழுத்துகளால் இந்தப் புகைப்படத்தை வரைந்ததாகவும், இதனைப் பார்த்து ஆனந்த் மகேந்திராவே தமிழில் பாராட்டி ட்வீட் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ எனத் தெரிவித்தார்.
ஓவியர் கணேஷ்

மேலும் 'தான் வறுமையில் வாடுவதால், தமிழ்நாடு அரசு தன்னுடைய ஓவியத்திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஓவியம் சார்ந்த துறையில் தனக்கு ஏதேனும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

கணேஷ் வரைந்த ஓவியங்கள்

இதையும் படிங்க: அன்னையர் தினத்தில் 'இட்லி பாட்டிக்கு' வீடு பரிசளித்த ஆனந்த் மகேந்திரா!

Last Updated : May 23, 2022, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details