செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சென்னை கடற்கரைவரை செல்லும் மின்சார ரயிலில் பிறந்து ஏழு நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து யாரோ போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் ரயில்வே காவல் துறையினர் அக்குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது குழந்தை சிகிச்சை பெற்றுவருகிறது.