காஞ்சிபுரம்:சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டி ஊராட்சி எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், சதீஷ். திமுக வார்டு உறுப்பினரான இவர், முன்விரோதம் காரணமாக சில மாதங்களுக்கு முன்னதாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக ஒன்றிய பிரதிநிதியான எஸ்தர் என்கிற யோகேஸ்வரி கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
Viral Audio - பெண் தாதாவுடன் உளவுத்துறை காவலர் ஆபாச பேச்சு - பெண் தாதாவுடன் காவலர் ஆபாச பேச்சு
காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா ஒருவரிடம், உளவுத்துறை காவலர் ஆபாசமாகப் பேசும் செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இவருடன் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உளவுத்துறைக் காவலர் மாதவன் என்பவர், அலைபேசியில் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. வேறொரு ரவுடியான சச்சின் என்பவரைப் பற்றி இருவரும் பேசிக் கொள்வதாக அமைந்துள்ள அந்த ஆடியோ உரையாடல் அந்தரங்கமாகவும் ஆபாசமாகவும் முடிகிறது. இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் காதலி மீது கல்லைப் போட்டுக் கொலை.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்ட நபர்!