காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கட்சி சார்பில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி. ரஞ்சித் குமார் போட்டியிடுகிறார். வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில் வெற்றி பெறவேண்டி 1008 தேங்காய்களை உடைத்த அவர், பின்னர் மாவட்ட வழங்கல் அலுவலரும், உத்தரமேரூர் தேர்தல் அலுவலருமான பாபுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டப்பேரவை உறுப்பினருக்கு வழங்கப்படும் ஊதியம் முழுவதையும் உத்தரமேரூர் தொகுதியிலுள்ள ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதை ஒருபோதும் எனது குடும்பத்திற்கு பயன்படுத்த மாட்டேன்.