காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வரதராஜபுரம் பகுதியில் நரசிம்மா ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. சுமார் 20 ஆண்டுகள் பழமையான இக்கோயில் அடையாறு கால்வாய் நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று (ஜனவரி 10) அலுவலர்கள் கோயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முற்பட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோயிலை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.