உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களும் கரோனாவின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. சென்ற வாரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா! - உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா
காஞ்சிபுரம்: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா!
இந்நிலையில், நேற்று இரவு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிக்கு (ஸ்ரீபெரும்புதூர் தொகுதி), கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவர் சென்னை அருகே ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களாகவே நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து இவருக்குத் தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.