காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறார். இதனால், வி.சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட கிராமப்புறங்களில் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்! - Kanchi Vijayendra Saraswati Swami
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 28) பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள மறைந்த சங்கராச்சாரியார்கள் சந்திரசேகர சரஸ்வதி, ஜெயந்திர சரஸ்வதி, ஆகியோரின் பிருந்தாவனங்களில் பூஜை செய்து வழிபட்டு, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் சந்தித்து வணங்கி ஆசிப் பெற்றார். பின்னர் கிராமப்புற பெண்கள் ஆரத்தி எடுக்க தனது தேர்தல் பரபுரையைத் தொடங்கினார்.
இதையும் படிங்க:கோயில்கள் மிக முக்கியம் - ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்