தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை! - Actress Chitra's Husband Hemnath arrested

காஞ்சிபுரம்: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை தொடங்கினார்.

ஹேம்நாத்
ஹேம்நாத்

By

Published : Dec 17, 2020, 9:37 AM IST

விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, சித்ராவின் பெற்றோரிடமும் ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் இரண்டு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டார்.

ஹேம்நாத் கைது

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் ஹேம்நாத் நசரத்பேட்டை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை தொடக்கம்
இந்நிலையில் ஹேம்நாத்தை விசாரணைக்கு முன்னிலையாக பொன்னேரி கிளைச் சிறைக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ அழைப்பாணை அனுப்பியதையடுத்து இன்று (டிச. 17) ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு ஹேம்நாத்தினை காவல் துறையினர் முன்னிறுத்தினர்.
ஆர்டிஓ விசாரணை


சித்ராவின் பெற்றோர், ஹேம்நாத்தின் பெற்றோர் ஆகியோரிடம் வரதட்சணை குறித்து விசாரனை நடத்திய ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ தற்போது ஹேம்நாத்திடமும் வரதட்சணை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

ஹேம்நாத்திடம் நடத்தப்படும் விசாரணையில் சித்ராவின் தற்கொலைக்குப் பல்வேறு உண்மைத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டாடா நகர்-யஷ்வந்த்பூர் இடையே காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

ABOUT THE AUTHOR

...view details