சென்னையைச் சேர்ந்த இரும்பு வியாபாரிகள் முரளி, பாலாஜி, சரவணன் ஆகியோர் வேலூரில் வியாபாரிகளிடம் வசூல் செய்த ரூ. 69 லட்சம் பணத்துடன் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த சின்னையன் சத்திரத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முரளி சம்பவ இடத்திலேயே பலியானார் மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.
கார் விபத்தில் சிதறிய ரூ.69 லட்சங்கள்! - 69 லட்ச பணத்துடன் நேர்ந்த விபத்து
காஞ்சிபுரம்: 69 லட்ச ரூபாய் பணத்துடன் மூன்று பேர் வந்த சொகுசுக் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார், படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![கார் விபத்தில் சிதறிய ரூ.69 லட்சங்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3579256-thumbnail-3x2-accident.jpg)
தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தினர் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்கள் கொண்டுவந்த பணத்தையும் கைபற்றி பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
பல லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டுவந்தபோது வாகனம் விபத்துக்குள்ளானது தற்செயலா? அல்லது பணத்தைப் பறித்துச் செல்ல யாரேனும் செய்த சதிச் செயலா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து வந்த வாகனத்தைப் பின் தொடர்ந்துவந்து விபத்தை ஏற்படுத்தி பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.