ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் 39ஆம் நாளான இன்று இள மஞ்சள், பச்சை நிற பட்டாடை அணிந்து காட்சிதரும் அத்திவரதரைக் காண ஏராளமான மக்கள் வந்துள்ளனர். இன்றும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது.
அத்திவரதர் வைபவத்தில் இவ்வளவு காணிக்கையா! - Aathivarathar festival
காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தில் ஆறு தற்காலிக உண்டியலில் நான்கு கோடியே 90 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அத்திவரதர் வைபவத்தில் இவ்வளவு காணிக்கையா!
38 நாட்களில் 56 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 38 நாட்களில் 6 தற்காலிக உண்டியலில் நான்கு கோடியே 90 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்கள் மட்டுமே ஒரு கோடி 65 லட்சம் ரூபாய்க்கு காணிக்கையை பக்தர்கள் செலுத்தினர்.