காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பள்ள தெருவில் வசித்து வந்தவர் அந்தோணி எஸ்டர்(45). இவர் ஆரனெரி கிராமத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி தங்கராணி (40). இந்நிலையில், இன்று காலை அந்தோணி எஸ்டர் அவருடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனது கடைக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி பிரசாத் என்பவரின் மகன் அட்சயபிரசாத் (24) அதிவேகமாக ஓட்டிவந்த யமஹா எஃப்இசட் வாகனம் எதிர்பாராத விதமாக அந்தோணியின் வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தோணி எஸ்டர் , அட்சயபிரசாத் ஆகியோர் பலத்த காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.