புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்துவருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச. 04) இரவு முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் இன்று (டிச. 05) காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 6.1 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 9.92 செ.மீ., உத்திரமேரூரில் 3 செ.மீ., வாலாஜாபாத்தில் 5.58 செ.மீ., குன்றத்தூரில் 8.97 செ.மீ. என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 41.37 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.