காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் சூலை கருப்பு என்கின்ற வடிவேல் (27). இவர் மீது சிவகாஞ்சி காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்த வடிவேலை பலர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் தன் வீட்டை விட்டு வெளியில் சென்ற வடிவேலுவை மடக்கி அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவுடி வடிவேலுவின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.