எதிர் வரும் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் மகேஷ்குமார், உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமுந்தரம் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேற்று (மார்ச்.27) பரப்புரை செய்தார். அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது:
”காஞ்சி. பட்டு சேலைகளுக்கு பெயர் போன மாவட்டம் இது. தற்போது இங்கு போலி பட்டு சேலைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு விவசாயி மீண்டும் தமிழ்நாட்டை ஆளப் போகிறார். மாற்று மதத்தினர் பாதுகாப்பாக இருக்க பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு சொட்டு சாராயம்கூட இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பாடுபட்டு வருகிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 11 சாராய ஆலைகள் உள்ளன. அதில் ஏழு ஆலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளன.
பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் .ராமதாஸ் அந்த சாராய ஆலைகளைக் கொண்டு வந்தது திமுக. மறைந்த கலைஞர் கருணாநிதிதான் தமிழ்நாட்டிற்கு சாராய ஆலையைக் கொண்டு வந்தார். 44 சமுதாயத் தலைவர்கள், மத குருமார்கள் உடன் சேர்ந்து கலைஞரை சந்தித்தேன். சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினேன். இதன் எதிரொலியாக ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது. திமுகவால் செயல்படும் மது ஆலையால் வருடத்திற்கு இரண்டு லட்சம் நபர்கள் உயிரிழக்கின்றனர்” எனப் பேசினார்.
இதையும் படிங்க:முதல் முறையாக அரசியல் நிலைப்பாடை அறிவித்த கத்தோலிக்க பேரவை