தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டையில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு - தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு! - காஞ்சிபுரம் செய்திகள்

காஞ்சிபுரத்தில் 10 அடி ஆழ குட்டையில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 84 வயது மூதாட்டியை விரைந்து சென்று பத்திரமாக மீட்டெடுத்த தீயணைப்புத் துறையினரின் செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

84year old lady rescued
84year old lady rescued

By

Published : Jan 3, 2021, 2:47 PM IST

காஞ்சிபுரம்:84 வயதான மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை‌ பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு அருகேயுள்ள வசந்தம் நகர் பகுதியில், சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையினால் அங்குள்ள 10 அடி ஆழ குட்டை ஒன்றில் நீர் நிரம்பி பாதுகாப்பின்றி இருந்தது.

இச்சூழலில், இன்று 84 வயதான மூதாட்டி தனலட்சுமி எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவலளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக குட்டையில் இறங்கி 84 வயதான மூதாட்டியை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்து பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீயணைப்புத் துறை வீரர்களின் இந்த துரித செயலினால் 84 வயதான மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை‌ வெகுவாக பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details