கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில் 750 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 295 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 455 ஏரிகள் என 750 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 73 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 ஏரிகள் 50 விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 16 ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாக உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மையானதாக தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் 18 அடி ஆழத்தில் 1 டி.எம்.சி தண்ணீரை தேக்க முடியும். ஏரியின் முழு கொள்ளளவான 18 அடியும் தற்போது நிரம்பி ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.