6 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு! - காஞ்சிபுரம் செய்திகள்
காஞ்சிபுரம்: ஸ்ரீ ஆதி பீடம் பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டது.
6 crore rupees land rescued
காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதி பீடம் பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார், திருமாறன் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாத வாடகை செலுத்தி பயன்படுத்தி வந்தனர். அந்த நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறை முயன்றபோது, அங்குள்ள நபர்கள் காலி செய்ய மறுத்துள்ளனர்.