காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பாலாஜி நகரில் வசிப்பவர் சண்முகப்பிரியன் (35). ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்துவரும் இவருக்கு சரண்யா என்ற மனைவியும், கிருத்திகா, தன்ஷிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் சண்முகப்பிரியன் தனது குழந்தையின் மருத்துவப் பரிசோதனைக்காக குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்தபிறகு, குடும்பத்துடன் மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார் சண்முகப்பிரியன்.
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இக்கொள்ளைச் சம்பவம் குறித்து சண்முகப்பிரியன் பாலுசெட்டிசத்திரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தன்பேரில், காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமேகலை, காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை வல்லுநர்கள் தடயங்களைப் பதிவுசெய்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற வீட்டின் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை! - Gold theft in house
காஞ்சிபுரம்: தனியார் நிறுவன மேலாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிபு் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
கொள்ளை சம்பவம்