காஞ்சிபுரம் மாவட்டம், தும்பவனம் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இக்கிணறானது அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்பட்டுவந்த நிலையில் சமீப காலமாக நீரின்றி காணப்படுகிறது.
தாய் நாயின் பாச போராட்டம்: கிணற்றில் விழுந்த 3 நாய் குட்டிகள் மீட்பு! - 3 puppies rescued in Kanchipuram
காஞ்சிபுரம்: தாய் நாயின் பாச போராட்டத்தால் கிணற்றில் விழுந்த 3 நாய் குட்டிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டு தாய் நாயுடன் சேர்த்தனர்.
இந்நிலையில், இன்று (பிப். 10) பிற்பகல் அக்கிணற்றில் மூன்று நாய் குட்டிகள் தவறி விழுந்துள்ளன. இதைக்கண்ட தாய் நாய் கதறிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த மூன்று நாய் குட்டிகளையும் உயிருடன் மீட்டு தாய் நாயுடன் சேர்த்தனர். தன் குட்டிகள் கிணற்றில் விழுந்ததை கண்ட தாய் நாயின் பாச போராட்டம், ஓர் உணர்ச்சி பூர்வமான பாசபிணைப்பை ஊட்டியதும், உயிரின் மதிப்பறிந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களின் கடமை தவறா பணியும் அப்பகுதி மக்களுக்கிடையே வரவேற்பை பெற்றது.