தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கத்தில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி முருகனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

By

Published : Feb 15, 2021, 7:29 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பாக்கியராஜ், ஆறுமுகம், முருகன் ஆகிய மூன்று தொழிலாளிகள் உயிரிழந்தனர். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் பாக்யராஜ் மற்றும் ஆறுமுகத்தின் உடலை பெற்றுச் சென்றனர். ஆனால் தொழிலாளி முருகனின் உறவினர்கள் தங்களுக்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் உடலை வாங்க மறுத்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த முருகனின் குடும்பத்தாருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முருகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தனியார் கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கடேஷ் (38), இடத்தின் உரிமையாளரான கிருஷ்ணராஜ் (43) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிவாரணம் அறிவிப்பு

இதனிடையே விஷவாயு தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details