காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் நகரில் முக்கிய சந்திப்புகளான பூக்கடைச்சத்திரம், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு விதிமீறல்: சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் 2,352 வாகனங்கள் பறிமுதல்! - வாகனங்கள் பறிமுதல்
காஞ்சிபுரம்: முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2ஆயிரத்து352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு: விதிகளை மீறி சாலையில் திரிந்த 2,352 வாகனங்கள் பறிமுதல்!
அப்போது, ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் திரிந்தவர்களின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்டத்தில் இன்று (மே.25) ஒரே நாளில் 279 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்று வரை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.