தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிகள் மீறல் தொடர்பாக 17.48 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக இதுவரை சுமார் 17.48 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டதாக பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாம்  நகராட்சி ஆணையர் மகேஸ்வரி  ஆய்வு செய்தார்.
திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

By

Published : May 22, 2021, 9:59 PM IST

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்தை தொடர்ந்து காய்ச்சல் கண்டறிதல் முகாம் , வீடு வீடாக சென்று உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சுழற்சி முறையில் நாள்தோறும் காய்ச்சல் கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இன்று சின்ன காஞ்சிபுரம் திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாம், அன்னை சத்யா நகரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் ஆகியவற்றை காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. 101 பணியாளர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டு 15 ஆயிரம் வீடுகளில் உள்ளோருக்கு வெப்பநிலை கண்டறியப்பட்டு பதிவு செய்து அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதேபோல் மொபைல் வாகனம், சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி 2,000 மாதிரிகள் வீதம் இதுவரை 2,57,487 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 17 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, நகராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:அந்த 2,000 ரூபா எனக்கு வேண்டாம்' - ரேஷன் கடையில் சொல்லிவிட்டுச் சென்ற விவசாயிக்கு ஷாக்!

ABOUT THE AUTHOR

...view details