காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த அருந்ததியர்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பாத்திமாராணி (49). இவர், கணவரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு செய்யாறில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில், இன்று (பிப். 20) வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பாத்திமாராணிக்குத் தகவல் அளித்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த ரூ.6 ஆயிரம் பணம், 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த தகவலையடுத்து வீட்டிற்கு வந்த பாத்திமாராணி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.6 ஆயிரம், 15 சவரன் தங்க நகை, வெள்ளிக் கொலுசுகள், திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து பாத்திமாராணி பெருநகர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊதியம் வாங்கச் சென்ற வீட்டில் ரூ.1.20 லட்சம் கொள்ளை: இளைஞர் கைது