தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 142 வேட்புமனு தாக்கல் - Nominations filed in kancheepuram

காஞ்சிபுரம்: உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), காஞ்சிபுரம், ஆலந்தூர் ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட 142 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

nomination
வேட்பு மனு தாக்கல்

By

Published : Mar 20, 2021, 9:27 AM IST

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதிமுதல் தொடங்கி நேற்றுடன் (மார்ச் 19) முடிவடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள்பட்ட காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 36 பேரும், உத்திரமேரூர் தொகுதியில் 33 பேரும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 25 பேரும், ஆலந்தூர் தொகுதியில் 45 பேரும் முறையே அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தமாக 142 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.

வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகவும், அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க:புகைப்பிடித்தலுக்கு 'நோ' சொல்லும் ஹிமாச்சல் கிராமம்

ABOUT THE AUTHOR

...view details