தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 252 வழக்குகளில் தீர்வுத் தொகையாக ரூ. 13.67 கோடி வழங்கல்! - Kancheepuram People's Court

காஞ்சிபுரம்: மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 817 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 13 கோடியே, 67லட்சத்து, 16 ஆயிரத்து, 800 தீர்வுத்தொகையாக வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில்
காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில்

By

Published : Apr 10, 2021, 10:16 PM IST

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தொழிலாளர் நல நீதிமன்றம் உள்பட ஐந்து அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் கூடியது.

மக்கள் நீதிமன்ற தொடக்க விழா

அதையொட்டி, மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட நீதிபதி ஜெ. சந்திரன் தலைமை வகித்தார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் நீதிபதியுமான பிரியா வரவேற்புரை வழங்கினார்.

ஒரே நாளில் 817 வழக்குகள்

பின்னர், மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 817 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.13 கோடியே, 67லட்சத்து, 16 ஆயிரத்து, 800 தீர்வுத்தொகையாக வழங்கப்பட்டது.

காப்பீட்டுத்தொகை வழங்கிய நீதிபதி

விபத்தில் உயிரிழந்த கருணாகரனின் தாயார் தெய்வானையிடம் காப்பீட்டுத் தொகையாக ரூ. 12 லட்சத்துக்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ஜெ. சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நீதிபதிகள் சரவணக்குமார், செந்தில்குமார், திருமால் மற்றும் வழக்கறிஞர் சங்க செயலாளர் சுப்பிரமணி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் உள்பட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details