காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் 176 மாணவ, மாணவிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 12 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் மீதமுள்ள 164 மாணவ, மாணவிகளும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) வரையில் 51 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 31 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அதில் 286 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் 29 ஆயிரத்து 294 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 451 பேர் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:8,000 கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கிய மோடி!