காஞ்சிபுரம்மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆசாத் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு ஆசாத் தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார்.
பயணம் முடிந்து பெங்களூருவில் இருந்து இன்று (மே14) காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே உடனடியாக இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர்.