கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள சேரந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், கார்த்திக் ஆகிய இருவரும், இன்று (அக்.05) அம்மன் கொல்லைமேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியே வந்த வாகனம் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர், உயிரிழந்த இளைஞர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருக்கோயிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.