கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 360 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலவரத்தின்போது மாட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மாடுகளை திருடிச் சென்றதாகவும் மற்றும் காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன் மற்றும் சஞ்சீவி ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.