கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் நான்கு மணி சந்திப்பு அருகே உள்ள பாலசுப்பிரமணியன் கோயில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்புப் பணிக்காக மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன்.21) காலை கோயிலின் அருகில் உணவகம் வைத்திருந்த பெண் ஒருவர் கோயில் வளாகத்தின் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது, பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோயில் வளாகத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்! - கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர் அருகே உள்ள கோயில் வளாகத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் வளாகத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்
இச்சம்பவம் குறித்து, திருக்கோவிலூர் காவல் நிலைத்தில் தகவல் கொடுத்தார். உடனே, டி.எஸ்.பி.திருமேனி, இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.